
அறியாத வயதில்
ஆறாம் வகுப்பில்
அழியாது தோன்றிய
ஆழமான அன்பே!
முதலில் தோன்றிய
முறியாத நட்பே!
சந்திக்க முடியாதென்று
சங்கடத்துடன் பிரிந்தோம்
அன்று பத்தாம்வகுப்பில்..

சகதியில் சிக்கிய பேருந்தில்
சாலை ஓரம் சென்றபோது
சிலநொடி வார்த்தைகளோடு
சிறகடித்து பறந்துவிட்டாய்!
சந்தர்ப்பங்கள் கிடைக்காதோவென்று
தவித்து கொண்டிருந்த நேரத்தில்
தெளிவான உன்முகம்
தெரிந்ததோர் புகைபடத்தில்
எல்லையற்ற மகிழ்ச்சியோடு
எல்லாவற்றையும் அறிந்துகொண்டேன்
உன் பள்ளி சிநேகிதநிடமிருந்து.
தொடர்புகொள்ள கிடைத்த
உன் தோழியின்...
தொலைபேசி எண்ணை
தொடர்ந்து முயற்சித்து................
மகளிர் விடுதியில் மங்கையர்கள்
மறைமுகமாக பயன்படுத்திய கைபேசியை
முப்பது நாட்களுக்கு பிறகு
முறையாக தொடர்புகொண்டு
மாறாத அந்த மழலைதன குரலை
மணிக்கணக்கில் மகிழ்ச்சியோடு ரசித்தேன்!
முக்கியமான அந்த கல்லூரிபருவத்தில்
முழுமையான உன் அன்பு
முறையாக என்னை வழிநடத்தி
முடிவில் தொலைந்து விட்டாய் !
ஏழாண்டுகளுக்கு பிறகு
எதிர்பாராமல் உன்முகத்தை
எதிரே கண்டபோது
கனவோ என்றுநினைத்து
கண்டுகொள்ளாமல் சென்றபோது
கைதட்டி அழைத்தகுரல்
கனவில்லை என்றுணர்த்தி
மகிழ்ச்சியில் மௌனமாய்
திகைத்துபோய் நின்றவனிடம்
தயக்கத்துடன் சிலநிமிட
சிரிப்புகளோடு சென்றுவிட்டாய்!!!!
பலமுறை இடைவெளி ஏற்பட்டும்
பலமான நம் நட்பு
பலவற்றையும் கடந்து
பாதிஆயுள் வரை தொடர்ந்து
சிகரம்போல் சீராக நின்றுகொண்டிருக்கிறது
இன்னொரு பாதிஆயிளும்
இனிதே நம்நட்பு மலர
இறைவனை பிராத்திக்கிறேன் !!!