Monday, November 12, 2012

நீளம் ?? .. சேண்டி ???.. திவ்யா ?? .. திரிஷா ????


மீள முடியவில்லை
மிகபெரும் சேதத்திலிருந்து!

எச்சரிக்கை பலவிருந்தும்
எதிர்கொள்ள இயலவில்லை!

புயலுக்கு பின் அமைதி
வேடிக்கை .....விசித்திரம் ..

இந்த புயலுக்குபின்
எனக்கில்லை நிம்மதி!

Tuesday, September 11, 2012


மொட்டை மாடியில் 
நிலவின் ஒளியில் 
தென்றலின் தாலாட்டில் 
சுகமான துயிலை 
சுத்தமாகவே இழந்தேன்!

வேளைக்கு வேளை
உண்ட உணவு 
வேலையாகவே மாறிவிட்டது !

காதலியுடன் கழிக்கவேண்டிய 
பொன்னான பொழுதுகளை 
கணினியுடன் கழித்துக்கொண்டிருக்கிறேன் !

உடனிருந்து உற்சாகத்துடன் 
உரிமையோடு கொண்டாடவேண்டிய 
தோழர்களின் திருமணங்கள் 
தொலைபேசி வாழ்த்துகளோடு 
தொடர்ந்து கொண்டிருக்கிறது!!!

தழுவி அணைக்கவேண்டிய 
தங்கைமகனை ......தாய்மாமன் 
Skypeல் மட்டுமே 
கொஞ்சமுடிகிறது .. 

வேகமான இந்த 
வாழ்க்கை ஓட்டத்தில் 
மிஞ்சியது ....
வெறுமையான நினவுகள்மட்டுமே !!!!

Tuesday, July 17, 2012

முற்றுப்புள்ளி!

ஆரம்பத்திலே அறிந்தது
என்றோ ஒருநாள்
நம்நட்பிற்கு முற்றுப்புள்ளி
உண்டு என்று
சமுதாய சூழ்நிலைகளால் !

பலமுறை அந்தபுள்ளி
காற்புள்ளியாக (கமாவாக) மாறியது!

பிரச்சனை இல்லாத
பிரியாத நட்பென்று
புகழாரம் சூட்டினாய்
பூரிப்பு கொண்டாய் !

உன்குழப்பமான முடிவுகள்
பலவற்றிருக்கு ஆலோசகனானேன்
உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ள
முதன்மையானவனேன்....
என்பெயர் அறியாது
உன்னருகில் எவருமில்லை.

சபலங்கள் சிலவற்றால்
தடுமாறிய போது
தவறென்று உணர்த்தி
துணைநிற்பாய் என்றெண்ணினேன்!

மாறாக மாற்றான்போல்
தண்டித்துவிட்டாய்
முடிவுக்கு வந்துவிட்டது
முற்றுப்புள்ளியாக அந்த காற்புள்ளி,,,,,.

Tuesday, June 19, 2012

தடுமாற்றம் !!!




மண்ணித்துவிடு என்றேன்
மறந்துவிடு என்றாய்!

புரிந்துகொள் என்றேன்
பிரிந்துவிடு என்றாய்!

பின்தொடர்ந்தேன் ...
பிடிவாதம் கொள்கிறாய் !

இயல்பான நிகழ்வு என்றேன்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாய்!

விரும்புகிறேன் என்றேன்
வெறுக்கிறேன் என்றாய்!

இந்த எதிர்மறை பதில்

தோழன் என்றாய்
காதலி என்றதிலிருந்து!

Monday, June 11, 2012

என் தேவதை !!

சித்திரை வெயில்
ஜில்லென்ற காற்று
தென்னந்தோப்பில்
தனிமையில் நான்!!

ஏரிகரையில்
எண்ணற்ற வண்ணகள்
வானவில்லின் தோற்றமென
வியந்துநின்று காணயில்
வண்ணங்கள் பல
என்னை நோக்கி !!


வெள்ளை தாவணி
பச்சைநிற பாவாடை
மஞ்சள் ரவிக்கை
உலராத கூந்தலில்
ஓராயிரம் மல்லிகை
மஞ்சள்பூசிய முகத்தில்
மத்தியில் செந்சாந்திட்டு
மங்கை அவள்
விழைகிறாள்
மன்னனை காண !!!!

Sunday, May 6, 2012

தோழியே !!!
வளர்பிறையை போல
நாளும் வளர்ந்தது
நம்நட்பு .....
பல புரிதல்களோடு !

அது பௌர்ணமியாய்
ஒளிரநினைத்த போது
தேய்பிறையின்றி அம்மவாசையானது
நம் பிரிதலோடு!

இருள்சூழ்ந்த என்வாழ்வில்
என்றும் நட்சதிரங்களாய்
ஜொலிக்கும் அந்த
பசுமையான நினைவுகள் !!!

Tuesday, January 17, 2012

பட்டணத்து பெண்ணே!!!!

பட்டணம் ..............
என் படிப்பை வளரவைத்தது
தகுதியை வளர்க்க உதவியது
தரமான வேலைவாய்ப்பையும்
அமைத்து கொடுத்தது..

பத்தாண்டுகளில் உன்னின்
பலமுகத்தை பழக்கிக்கொண்டவன்
பட்டணத்துப்பெண்ணே .........
உன்அன்பினை மட்டும்
ஏற்க்க மறுக்கிறது மனம்..

தோழனாய் தோளுயர்ந்து
நிற்கின்றவன்....
காதலனாய் கரைந்துவிடுகிறேன்

மங்கையர்யெனில் மாறாத
குணநலன்கள் இவையென்று
பசுமரத்தானிபோல் பதிந்துவிட்டது.
அறிவுக்கு எட்டுகிறது
இந்தஉலகமாற்றம்
அதை உணர மறுக்கிறது
என் பிற்போக்கான மனம்,,

பிற்போக்கான சிந்தனை
என்னில் மட்டுமல்ல
என் சமுதாயத்திலும்..பரவிகிடக்கிறது
மாறும் நம்வருங்காலம்
என்றநம்பிக்கையில் ...
மாறமுயற்சிக்கிறேன்.