Sunday, December 12, 2010

பொழுதெல்லாம் பேசுவதாலோ
ஒன்றாக சுற்றுவதாலோ
உதவிகள் பல புரிவதாலோ
உண்மையான அன்பு பிறப்பதில்லை...

...நட்பானாலும் காதலானாலும்
எண்ணங்கள் இணையும்போது மட்டுமே
இதயங்கள் இணையும் அவ்விடத்தில்
உண்மையான அன்பு பிறக்கும்
அது நிலைக்கும்.!!!!!

Monday, August 2, 2010

இயல்பு ¡¡¡¡¡

மறுக்கமுடியவில்லையடி ....
மனதில் ஓர் தடுமாற்றம்
மாற்றான் தோளில்
உன்தலை சாய்ந்தது கண்டு !!!!!!

அருகில் இருந்தவரை
அறியவில்லை..........
விலகிசென்றவுடன் என்னுள்
சில மாற்றங்கள்
அன்பை அபகரிக்க
அவன் வந்துவிட்டானோ என்று??????

Wednesday, June 9, 2010

இளகிய மனம்??????

மங்கையர் கண்ணீரால்
மனம் இளகி
மனமில்லாமல்.....
மனம்ஒத்து பிரிகிறோம்
என்கிறது அவன்மனம்

இழிவுகள் பலதாங்கியும்
பழிச்சொல் சுமத்தியதில்லை
அந்த மனம்

கரைப்பார் கரைத்தால்
கல்லும் கரையும்
பெற்றவர்கள் மனம்மட்டும்
விதிவிளக்கோ????

முயற்சிகளே சிறிதும்
எடுக்காமல் ....
முடியாது அவர்களைமாற்ற
என்றுஎண்ணி மூவரின்
வாழ்வில் விளையாட
எண்ணுகிறது அவள்மனம்

ஆழமான அன்பினை
ஆடைபோல்........
மாற்றி செலுத்தவல்லது
அந்த மனம்.

Tuesday, May 25, 2010

தனிமை :(

பல்லாயிரம் மயில் தொலைவு
புதுபுது தகவல்தொடர்பு சாதனங்கள்
எத்தனை மணித்துளிகள் பேசினாலும்
என்னுள் ஏதோ குறை
எதையோ இழப்பது போல :(

கனவில் வந்து கன்னத்தில்
கொடுத்தாலும் ........... :)
உன் கடிதம் காணும்வரை
கலங்கியே நின்றன என்கண்கள்
உன் பிரிவினால்!!!!!!!

Saturday, May 15, 2010

தூதுபோ !!!

உன்அருமை தெரியாமல்
உன்னை குடைவைத்து
மறைப்பதை போல
என்காதல் புரியாது
என்னைஅவள் வெறுக்கிறாள் ....

உன்பெருமை சொல்லபலருண்டு
என்அருமை உணர்த்த
எவருண்டு????????

தூதுபோ மழையே
இந்த தூயவனின்
காதலை உணர்த்த
பதிலோடு வருவாய்என
பணிவோடு காத்திருக்கிறேன் .

Wednesday, March 24, 2010

மாட்டுப்பொங்கல்

பத்துமாதம் சுமந்துபெற்றவனோ
பாதியில் விட்டுவிட்டான்
பட்டினியாக நடுத்தெருவில்........
பகுத்தறிவற்ற அவைகளோ
பசியாற்றுகின்றன.......
இந்தமுதியவர்களுக்கு!!!

Sunday, March 21, 2010

பயணத்தின் பயன் :)

ஓடும்இரயிலில் ஒன்பதுமணிநேரம்
இருள்சூழ்ந்த இரயில்பெட்டியில்
பௌர்ணமியாய் ஒளித்திருந்த
உன்முகம் ரசித்ததிலிருந்து.....
உறங்காமல் பலஇரவுகள்
உன்நினைவால் வாடுகிறேன்

Sunday, March 14, 2010

மழையில் நனைந்தபோது
மற்றவர்கள் பலர்நனைய
குடைக்குள்எனக்கு இடமளித்தவளே!!!

உணவு இடைவேளையில்
ஓயாத வேலையினால்
உணவை மறந்தபோது
பாதிவுணவளித்து பசியாற்றியவளே!!!!!

கல்லூரிக் கட்டணத்திற்காக
கால்கடுக்க நெடுவரிசையில்
நீண்டநேரம் நின்றபோது
குறிகிய பெண்வரிசையில்நின்று
கட்டணம் செலுத்துதவியவளே!!!!

பருவ தேர்வில்
திருதிருவென முழித்தபோது
தெளிவான உன்தாள் தெரிய
தோள் அசைத்து உதவியவளே!!!

வினையாமல் இவைஅனைத்தும்
இயல்பான வாழ்வில்
இன்றியமையாதவை
காரணங்கள் கண்டறிய
காலங்கள் பல காத்திருக்கிறேன்.

Thursday, January 7, 2010


இழப்புக்கூட இனிமையானது
என்னவளிடம் என்னுடைய
இதயத்தை இழந்தபோது!!!!!