Posted by இலக்கியசெல்வன்

மழையில் நனைந்தபோது
மற்றவர்கள் பலர்நனைய
குடைக்குள்எனக்கு இடமளித்தவளே!!!

உணவு இடைவேளையில்
ஓயாத வேலையினால்
உணவை மறந்தபோது
பாதிவுணவளித்து பசியாற்றியவளே!!!!!

கல்லூரிக் கட்டணத்திற்காக
கால்கடுக்க நெடுவரிசையில்
நீண்டநேரம் நின்றபோது
குறிகிய பெண்வரிசையில்நின்று
கட்டணம் செலுத்துதவியவளே!!!!

பருவ தேர்வில்
திருதிருவென முழித்தபோது
தெளிவான உன்தாள் தெரிய
தோள் அசைத்து உதவியவளே!!!

வினையாமல் இவைஅனைத்தும்
இயல்பான வாழ்வில்
இன்றியமையாதவை
காரணங்கள் கண்டறிய
காலங்கள் பல காத்திருக்கிறேன்.

This entry was posted on Sunday, March 14, 2010 at Sunday, March 14, 2010 . You can follow any responses to this entry through the comments feed .

0 comments

Post a Comment

Post a Comment