Thursday, April 23, 2009

ஏமாற்றம்


அழகை கண்டு
ஆசை படாதே
அதை நினைத்து பிறகு
அவஸ்தை படுவாய் நீ....

ஒழியாதோ இவ்வகை (திரு)மன(ண) ங்கள்???


பாரத்தை குறைப்பதாக எண்ணி
பாடி திறிந்த சிறுமியின்
படிப்பை பாதியில் நிறுத்தி
மணவறை அறியா மங்கையை
மாலையிட்டு அனுப்பி வைத்தோர்
மௌனமாக நின்றனர் பெருந்துயரத்தில்:(
மடியில் ஓர் குழந்தையுடன்
மாங்கல்யம் அற்று பாரமாய்
வந்து நின்ற மகளை கண்டு!!!!!!!!

Tuesday, April 21, 2009

பாசம்


பதிநான்காண்டு வனவாசம், ஸ்ரீ இராமன்
தன் தந்தை சொல்லுக்காக
பதினெட்டாண்டு வெளிதேசம், தந்தை
இந்த செல்ல பிள்ளைகளுக்காக!!!

பதிலை தேடி


உன் வார்த்தைகளுக்காக என் செவியும்
உன் வருகைக்காக என் விழியும்
உறங்காமல் காத்திருக்கும்
உன் பதிலை தேடி ???

முதல் கடிதம்

முகவரி கேட்கும் பொழுது
முகம் மலர்ந்து சொன்னாய்
மறக்காமல் போன் செய்வேனென்று
மறந்ததை நினைவு கொள்ள
இதோ மடல் எழுதுகிறேன்.

வாழ்க பல்லாண்டு


எல்லோரிடத்தும் ஒன்றுபோல் பழகி
எல்லையட்ற்ற மனதை கவர்ந்தவளே
சினத்தை சிறிது குறைத்து
சீறும் சிறப்புடன் வாழ
சிநேகிதனின் நல்வாழ்த்துகள்......

Sunday, April 19, 2009

உண்மையைதான் சொல்கிறேன் .....


வியந்துவிட்டேன் நான்

உன்னை தாவணியில் கண்டவுடன்

விழுந்துவிட்டேன் நான்

உன் தாழ்வான புன்னகையினால்!!!!!!

எய்ட்ஸ்



தெரியாமல் போனது நீ வந்தது
தெரிந்தே செய்த தவறுகளால்:(

மௌன வேதனை



மறுத்தால் கூட
மறக்க முயற்சிப்பேன்
மறைத்தால் மறுக்குதடி மனம்
மற்றொருவளை நினைக்க !

எனது கல்லுரி


எதிர்பார்ப்பின்றி வந்தேன்
என் தாய்தந்தையை பிரிந்து
எத்தனையோ கற்றேன்
எண்ணற்ற நண்பர்களிடமிருந்து
எல்லையின்றி மகிழ்ந்தேன்
எதிரிலுள்ள மைதானத்தில்
எதிர்பார்புடன் செல்கிறேன்
என்றாவது சாதிப்பேன் என்று !!!