என் முதல் முயற்சி
என் நினைவுகள் இதோ இந்த சொற்றொடர்களாக
Wednesday, March 24, 2010
மாட்டுப்பொங்கல்
பத்துமாதம் சுமந்துபெற்றவனோ
பாதியில் விட்டுவிட்டான்
பட்டினியாக நடுத்தெருவில்........
பகுத்தறிவற்ற அவைகளோ
பசியாற்றுகின்றன.......
இந்தமுதியவர்களுக்கு!!!
Sunday, March 21, 2010
பயணத்தின் பயன் :)
ஓடும்இரயிலில் ஒன்பதுமணிநேரம்
இருள்சூழ்ந்த இரயில்பெட்டியில்
பௌர்ணமியாய் ஒளித்திருந்த
உன்முகம் ரசித்ததிலிருந்து.....
உறங்காமல் பலஇரவுகள்
உன்நினைவால் வாடுகிறேன்
Sunday, March 14, 2010
மழையில் நனைந்தபோது
மற்றவர்கள் பலர்நனைய
குடைக்குள்எனக்கு இடமளித்தவளே!!!
உணவு இடைவேளையில்
ஓயாத வேலையினால்
உணவை மறந்தபோது
பாதிவுணவளித்து
பசியாற்றியவளே!!!!!
கல்லூரிக்
கட்டணத்திற்காக
கால்கடுக்க
நெடுவரிசையில்
நீண்டநேரம்
நின்றபோது
குறிகிய
பெண்வரிசையில்நின்று
கட்டணம்
செலுத்துதவியவளே!!!!
பருவ தேர்வில்
திருதிருவென
முழித்தபோது
தெளிவான உன்தாள் தெரிய
தோள் அசைத்து உதவியவளே!!!
வினையாமல் இவைஅனைத்தும்
இயல்பான வாழ்வில்
இன்றியமையாதவை
காரணங்கள் கண்டறிய
காலங்கள் பல காத்திருக்கிறேன்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)