Tuesday, September 29, 2009

மெய்பட காத்திருக்கிறேன்


உன்னோடுசென்ற உயர்தரசைவ உணவகம்
ஒன்றாக நாம்ரசித்த திரைப்படம்
நண்பர்களுக்கு பயந்துநழுவி சென்று
பார்த்த மருதமலைமுருகன் தரிசனம்
கூட்டமாக சென்று மகிழ்ந்த
உன் பிறந்தநாள் விருந்து............
நினைவாக்காமல் சென்ற
என் கனவை
என்று நிறைவேற்ற போகிறாய் ??

சிலநொடி வார்த்தைகளோடு :-)


அன்றொருநாள் சென்றுவருகிறேன்
என்று அசைத்த
உன் விழிகளுக்காக
இன்றுவரை என்கண்கள்
உன்முகம் தேடுகிறது
இனிஅந்த அசைவுகள்
தொடராதோவென்று!!!!

Saturday, September 12, 2009

திருமண அழைப்பிதழ்


நிமிடங்கள் சென்றன
வார்த்தைகள் நின்றன
கண்ணில் கண்ணீருடன்
மனதில் ஓர்பூகம்பம்...
மறைத்த காதலும்
மண்ணுக்குள் மறைந்தது
மணமக்களின் பெயர்கண்டு!!